இந்த விருதுநகர் கோழி ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிதானது. இதன் சுவை ரொம்ப அலாதியானது. இதை செய்து கொடுத்தால் என் கணவர் விடுமுறை நாட்களில் வேறு எங்கும் செல்லமாட்டார் வீடே கதியென்று கிடப்பார்.
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி- 1 கிலோ
சிறிய வெங்காயம்- ¼ கிலோ
தக்காளி - ¼ கிலோ
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
சோம்பு, சீரகம் – 1 ஸ்பூன் (பொடித்தது)
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் – 25 கிராம்
மிளகுத்தூள் - ¼ ஸ்பூன்
புதினா - சிறிதளவு (தேவைப்பட்டால்)
எப்படிச் செய்வது?
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போட்டுத் தாளிக்கவும்.
- பிறகு சிறிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் வாணலியில் போட்டு சிவந்த நிறம் வரும் வரை கிளறவும்.
- பிறகு மிளகாய்த்துள், தனியாத்துள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் அனைத்தையும் அதில் போடவும்.
- இனி கோழிக் கறியை அதில் போட்டுக் கிளறவும். உப்பு தேவையான அளவிற்குச் சோத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன், ¼ ஸ்பூன் மிளகுத்தூள் சிறிது புதினா இலைகள் சேர்த்து இறக்கினால் அருமையான சிக்கன் ரோஸ்ட் ரெடி.
