Monday, November 23, 2009

தாலாட்டு பாட்டு




இந்த காலத்து இளம் தாய்மார்கள் அழும் குழந்தையை தேற்றுவதற்கோ அல்லது குழந்தையை தூங்க வைப்பதற்கோ தாலாட்டு பாடத் தெரியாமல் கஷ்டப்படுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காகவே நான் என் குழந்தைக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் இதோ.

"ஆராரோ ஆரிராரோ கண்ணே
என் கண்ணே நீ கண்ணுறங்கு
என் பொன்னே நீ கண்ணுறங்கு
யாரஅடிச்சா நீ அழுற [ஆராரோ ஆரிரரோ ......]

மாமி அடிச்சாளோ மல்லிகைப்பூ செண்டாலே
மாமன் அடிச்சாரோ மரிக்கொழுந்து செண்டாலே
பாட்டி அடிச்சாரோ பஞ்சுடைக்கும் கோலாலே
பாட்டன் அடிச்சாரோ பசுவேட்டும் கோலாலே
அண்ணன் அடிச்சாரோ அத்திப்பூ கையாலே

அக்கா அடிச்சாரோ ஆவாரம்பூ கையாலே
அடிச்சார சொல்லியழு அக்கினைகள் பண்ணுகிறேன்
அடிக்கு அடியே வாங்கிடுவேன்
அத்தனையும் தாங்கிடுவேன் [ஆராரோ ஆரிரரோ ......] "

5 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. வாலாட்டும் குழந்தைக்கு தாலாட்டு !
    தாலாட்டுச் சொன்ன உனக்கு பாராட்டு!
    தொடரட்டும் உன் தாலாட்டு! வாழ்த்துக்களுடன்
    மதுரையிலிருந்து சரவணன்.

    ReplyDelete
  3. உமா ம‌கேஸ்வ‌ரி...

    உங்க‌ள் தாலாட்டு ப‌டித்த‌தும், என‌க்கே யாரோ தாலாட்டு பாடிய‌தை போல் தூக்க‌ம் வந்த‌து....

    ReplyDelete
  4. //உமா ம‌கேஸ்வ‌ரி...

    உங்க‌ள் தாலாட்டு ப‌டித்த‌தும், என‌க்கே யாரோ தாலாட்டு பாடிய‌தை போல் தூக்க‌ம் வந்த‌து...//

    நன்றி கோபி அவர்களே, தங்களின் விமர்சனத்திற்கு நன்றி. என் வலைத்தளத்துக்கு மீண்டும் மீண்டும் வருகை புரிந்து தங்கள் கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. படிச்ச உடனே தூக்கம் வருதுங்க...

    :-)

    ReplyDelete

Related Posts with Thumbnails