- இரண்டு பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை, ¼ கப் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். புளியை வடிகட்டியில் வடிகட்டி, அதை மைக்ரோ- ஹையில் மூடாமல் 7 அல்லது 9 நிமிடங்கள் வைக்கவும். ஒருமுறை கலந்து விடவும். புளி பேஸ்ட் ரெடி. நீண்டநாட்களுக்கு ப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
- ப்ரிஜ்ஜில் இருக்கும் இறுகிப்போன வெண்ணெய்யை வெளியே எடுத்தால் அது எப்பொழுது அறையின் வெப்ப நிலைக்கு வருவது? அதை எப்பொழுது காய்ச்சுவது? வெண்ணெய்யை ஓவனில் டீப்ராஸ்டு மோடில் 20 செகண்டுகள் வையுங்கள். வெண்ணெய் மெத்தென்று இருக்கும்.
- பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் ஒரு தட்டு அல்லது பேப்பரில் பரத்தி மைக்ரோ- ஹையில் 20- 30 செகண்டுகள் வைத்தால், அவற்றின் முதுகுத் தோலை ஈசியாய் உரித்து விட முடியும்.
- ப்ரிஜ்ஜில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிழிய, மைக்ரோ- ஹையில் 30 செகண்டுகள் வைத்து எடுத்தால் “பிழி பிழி” என்று பிழியலாம். நிறைய சாறு வழியும்.
- தண்ணீரில் தக்காளியைப் போட்டு மூடி, மைக்ரோ- ஹையில் 3 நிமிடங்கள் வைத்து எடுங்களேன். தக்காளியின் அரக்குப் பாவாடையை அழகாக அவிழ்த்து விடலாம்!
Friday, November 27, 2009
பயனுள்ள மைக்ரோவேவ் டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
எலுமிச்சம்பழம் டிப்ஸ் சூப்பர்..
ReplyDeleteஇப்படிக்கு
எலுமிச்சையை பிழிஞ்சு கையை காயமாக்கியவன்.
திரு. செந்தழல் ரவி அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
ReplyDeleteரொம்ப சூப்பரான மைக்ரோவேவ் டிப்ஸ்
ReplyDeleteஅந்த எலுமிச்சை டிப்ஸ் ம்ம் ரொம்ப சூப்பர்.நான் சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைப்பேன். இதுவும் நல்ல ஐடியா.
வாங்க என் டிப்ஸ் பகுதிக்கும்.
www.tip-jaleela.blogspot.com
ரைட்டு... இன்னம் கொஞ்சம் நிறைய எதிர்பார்கிறோம்!!
ReplyDelete"ப்ரிஜ்ஜில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிழிய, மைக்ரோ- ஹையில் 30 செகண்டுகள் வைத்து எடுத்தால் “பிழி பிழி” என்று பிழியலாம்." தனியார் கம்பெனி ஊழியர்களை நிர்வாகம் பிழியற மாதிரி..? ரைட்?
ReplyDeletethanks for everyone who has given valuable comments. jajeela mam ur link is not opening.
ReplyDeletewww.allinalljaleela.blogspot.com
ReplyDeletewww.tips-jaleela.blogspot.com
Please collect award from my blog
ReplyDeletehttp://allinalljaleela.blogspot.com/2009/12/blog-post.html
டிப்ஸ்களுக்கு நன்றி.
ReplyDeleteஇன்னும் நிறைய வழங்கவும்.
உங்கள் இடுகைகள் அருமை.
-உமா பிரகாஷ்
பெங்களூர்.