Thursday, November 26, 2009
சைனீஷ் நூடுல்ஸ்
கடைகளில் கிடைக்கும் மசாலா சேர்ந்த நூடுல்ஸ்களில் வரும் மசாலாப் பொடிகளில் அஜினோ மோட்டோ கலக்கப்பட்டுள்ளது. அது உடலுக்கு நல்லதல்ல.
மசாலா சேர்க்காத நூடுல்ஸை சுவையாகச் வீட்டிலேயே செய்வது எப்படியென்று பார்போம்.
தேவையானவை:
நூடுல்ஸ் – 1 பாக்கெட்
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - ½ டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
குடை மிளகாய் – 1
கேரட் - 1
முட்டைக்கோஸ் – ¼
பச்சை பட்டாணி – 50 கிராம்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
தளதளவென கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி ,ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து தனியாக எடுத்து வையுங்கள்.
பொடியாக நறுக்கிய பச்சை மிள்காய், பொடியாக சீவப்பட்ட முட்டைக்கோஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி அகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும். பிறகு தனியாக எடுத்து வைத்த நூடுல்ஸையும் போட்டு கிளறினால் சைனீஷ் நூடுல்ஸ் ரெடி.
குறிப்பு: முட்டை, காய்கள், பனீர், காளான் என இனைப்புகளை மற்றும் மாற்றி விதவிதமாக செய்யலாம்.
Labels:
துரித உணவு
Subscribe to:
Post Comments (Atom)
simple, tasty and healthy food. i have never seen a recipe like this. i am going to try this in my weekend. pl put more recipe like this. வாழ்க வளமுடன்
ReplyDelete