Friday, January 15, 2010

உப்பு கறி

    எங்கள் ஊர்ப்பக்கம் மதுரையில் இந்த உப்புக்கறி மிகப்பிரபலம்.  எந்த மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் ஓரு அருமையான கிராமத்து சமையல். 
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி ¼ கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
வெள்ளை உருட்டு உளுந்து 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி ¼ டீஸ்பூன்

செய்முறை:
  • ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும் (குக்கரில் 1 விசில் + சிம்மில் 15 நிமிடம்)
  • வானலியில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, சோம்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியவுடன் வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.  
  • இதற்கு உப்பு கொஞ்சம் தூக்கலாக போட வேண்டும்.

Tuesday, December 29, 2009

துரித இட்லி


வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் அதை வீணாக்காமல் சுவையான இட்லியாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சாதம் 1 கப்
ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
மிளகு பொடி ½  டீஸ்பூன்
சீரகப்பொடி  ½  டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கேரட் 1
தேங்காய் துருவல் சிறிதளவு
பச்சை பட்டாணி ¼ கப்
மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


·        சாதம் அளவுக்கு ரவை எடுத்துக் கலந்து கொள்ளவும.
·        அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகு பொடி, சீரகப்பொடி, கேரட், தேங்காய் துருவல், பச்சை பட்டாணி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்தில், அழுத்திப் பிசைநது அரை மணி நேரம் ஊற வைக்கவும.
·        பிறகு எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் இந்தக் கலவையை இட்லியாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
·        இந்த துரித இட்லு ரொம்ப மிருதுவாக இருக்கும்

  • சைடு டிஷ் இல்லாமலேயே ரொம்ப சுவையா இருக்கும்.




Monday, December 21, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாகு





மைக்ரோவேவில் சமைப்பதால் உணவில் சத்துக்கள் விரையமாவதில்லை. வெகு சீக்கிரமாக சமைத்து விடலாம். சரி ரெசிப்பியைப் பார்க்கலாம்.
  
தேவையானவை:

கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 1 கப்
பால் 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை


செய்முறை:

·        மைக்ரோவேவ் பாத்திரத்தில் பாலைத் தவிர எல்லாவற்றையும் போட்டு, மைக்ரோ ஹையில் 6 நிமிடம் செட் செய்து, ஸ்டார்ட் செய்யவும்.
·        2½  நிமிடங்கள் ஆனபிறகு, பாஸ் பட்டனைத் தட்டி, பாத்திரத்தை வெளியே எடுத்து, பாலை ஊற்றி, ஒரு கிளறு கிளறி, மறுபடியும் உள்ளே வைத்து, மைக்ரோவேவை ஸ்டார்ட் செய்யவும்.
·        அடுத்த 3½ நிமிடம் கழித்து, மீண்டும் வெளியே எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே நெய் தடவியத் தட்டில் கொட்டிப் பரப்பவும்.
·        சிறிது ஆறியதும் துண்டு போடவும்
·        6 நிமிடத்தில் மைசூர் பாகு ரெடி.
·        இதற்கு நெய் மிகவும் குறைவாகவே செலவாகும்.


டிப்ஸ்: மைக்ரோவேவ் ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்துச் சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்படும். 

Thursday, December 17, 2009

கேப்பை ரொட்டி




இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு இன்றியமையாததாகும். இந்த வகையில் கேப்பை ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும். இது இதய நோய்யுள்ளவர்கள், சக்கரை நோய்யுள்ளவர்கள், உடல் குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாகும்.
   இந்தப் பதிவில் கேப்பை மாவைக் கொண்டு செய்யப்படும் ஒரு ரொட்டி வகையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கேப்பை மாவு 2 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கேரட் 1
தேங்காய் 1
கொத்தமல்லிகருவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் மற்றும் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
  • கேப்பை மாவுடன் உப்பு கலந்து நறுக்கிய மற்றும் துருவிய பொருட்களைச் கலந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பின்பு சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.
  • இது காலை உணவிற்கு உகந்ததாகும்.    
  • இதனை தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமல் அப்படியே சாப்பிடலாம். 






Monday, December 14, 2009

சன்னா கோஃப்தா







தேவையான பொருட்கள்:

சன்னா(வெள்ளை சுண்டல்)- ¼ கிலோ
கொத்தமல்லி இலை- ¼ கப்
பச்சை மிளகாய் – 1
தேங்காய் – 1 சில்லு
தலியா(கோதுமை ரவை) - ¼ கப்  (1 மணி நேரம் ஊரவைத்து)
உப்பு      - தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரித்தெடுக்க


செய்முறை:
  • முதலில் சன்னாவை 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை சன்னாவை வேகவைத்து இறக்கவும்.
  • வெந்த சுண்டல்கொத்தமல்லி இலைபச்சை மிளகாய்தேங்காய்ஊறவைத்த தலியா மற்றும் உப்பு சேர்த்து பருப்பு வடை பதத்தில் அரைத்தெடுங்கள்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து(புகையக்கூடாது)அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொரித்தெடுங்கள்.
  • சன்னா கோஃப்தா தயார்.
  • இந்த கோஃப்தா புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.


Thursday, December 10, 2009

ஆலுமேத்தி(உருளைகிழங்கு வெந்தையக்கீரைக் கூட்டு), வெந்தயக்கீரை சப்பாத்தி





இடையறாத குடும்ப வேலைகளுக்கு மத்தியில் புதிய பதிவிட நேரம் கிடைக்கவில்லை. என் 18 மாத மகள் அகல்யாவிற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.

நான் வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கிறேன். இங்கு எல்லா உணவு வகைகளும் வித்தியசமானதாகவும் சுவையானதகவும் இருக்கும். 

வடஇந்திய உணவில் வெந்தயக்கீரைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. வெந்தயக்கீரையை சுவையாகவும்கசப்புத்தன்மை இல்லாமலும்குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும் செய்யப்படும் ஆலுமேத்தி(உருளைகிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு) மற்றும் வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பாப்போம்.

ஆலுமேத்தி(உருளைக்கிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கியது)
வெந்தயக்கீரை -  ½ கட்டு 
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (சிறிதாக நறுக்கியது)
இஞ்சி - அங்குலம் 
பூண்டு - பல் 
மஞ்சள்பொடி - ¼ தேக்கரண்டி 
மிளகாய்ப்பொடி - தேக்கரண்டி
மல்லிப்பொடி - தேக்கரண்டி
சீரகம்- ½ தேக்கரண்டி
உப்பு ,எண்ணெய் - தேவைக்கேற்ப 


செய்முறை:
  • வானலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும். 
  • பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பிறகு தட்டிய இஞ்சிபூண்டு,  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்றாக வதக்கவும். 
  • பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீறையைச் சேர்த்துக் கிளறவும். 
  • கடைசியாக தக்காளியைப்  போட்டு கிளறவும்.
  • பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும்.
  • தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். 
அருமையான ஆலுமேத்தி தயார். இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். 






வெந்தையக்கீரை சப்பாத்தி (மேத்தி ரொட்டி)



தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை -  ½ கட்டு 
கோதுமை மாவு - 2 கப் 
மிளகாய்ப்பொடி - ¼ தேக்கரண்டி 
மாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி) - ¼ தேக்கரண்டி 
எண்ணெய் - தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப 


செய்முறை:

  • முதலில் வெந்தையக்கீரையை நன்றாக அலசித் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
  • கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்ப்பொடிமாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி), 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும்  வெந்தையக்கீரையையைச் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
  • பிறகு சிரிது சிரிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு போல பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு சப்பாத்திகளாக இட்டு சுட்டெடுக்கவும்.
சுவையான மேத்திரொட்டி ரெடி.




Tuesday, December 1, 2009

விருதுநகர் சிக்கன் ரோஸ்ட்





இந்த விருதுநகர் கோழி ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிதானது. இதன் சுவை ரொம்ப அலாதியானது. இதை செய்து கொடுத்தால் என் கணவர் விடுமுறை நாட்களில் வேறு எங்கும் செல்லமாட்டார் வீடே கதியென்று கிடப்பார். 


தேவையான பொருட்கள்: 
கோழிக்கறி- 1 கிலோ
சிறிய வெங்காயம்- ¼ கிலோ
தக்காளி    -   ¼ கிலோ
பூண்டு     -  25 கிராம்
இஞ்சி     -  25 கிராம்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
சோம்பு, சீரகம் 1 ஸ்பூன் (பொடித்தது)
தனியாத்தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்   - ¼ ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் 25 கிராம்
மிளகுத்தூள்   - ¼ ஸ்பூன்
புதினா - சிறிதளவு (தேவைப்பட்டால்) 


எப்படிச் செய்வது?
  1. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போட்டுத் தாளிக்கவும்.
  2. பிறகு சிறிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் வாணலியில் போட்டு சிவந்த நிறம் வரும் வரை கிளறவும்.
  3. பிறகு மிளகாய்த்துள், தனியாத்துள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் அனைத்தையும் அதில் போடவும்.
  4. இனி கோழிக் கறியை அதில் போட்டுக் கிளறவும். உப்பு தேவையான அளவிற்குச் சோத்துக் கொள்ளவும்.
  5. தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன், ¼ ஸ்பூன் மிளகுத்தூள் சிறிது புதினா இலைகள் சேர்த்து இறக்கினால் அருமையான சிக்கன் ரோஸ்ட் ரெடி. 






Related Posts with Thumbnails