தேவையான பொருட்கள்:
சன்னா(வெள்ளை சுண்டல்)- ¼ கிலோ
கொத்தமல்லி இலை- ¼ கப்
பச்சை மிளகாய் – 1
தேங்காய் – 1 சில்லு
தலியா(கோதுமை ரவை) - ¼ கப் (1 மணி நேரம் ஊரவைத்து)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரித்தெடுக்க
செய்முறை:
- முதலில் சன்னாவை 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை சன்னாவை வேகவைத்து இறக்கவும்.
- வெந்த சுண்டல், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், தேங்காய், ஊறவைத்த தலியா மற்றும் உப்பு சேர்த்து பருப்பு வடை பதத்தில் அரைத்தெடுங்கள்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து(புகையக்கூடாது), அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொரித்தெடுங்கள்.
- சன்னா கோஃப்தா தயார்.
- இந்த கோஃப்தா புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
இப்ப இருக்கற ஊர்ல இதெல்லாம் கிடைக்குதா? ம்ம்ம் எனக்கெல்லாம் உங்க குறிப்பு ஏட்டு சுரைக்காய்தான்..
ReplyDeleteநான் குறிப்பிட்டுள்ள பொருட்கள் எல்லாம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். தங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteNice Receipe.. Thanks for sharing
ReplyDeletegood snacks for kids thanks.expecting more
ReplyDelete@priyatamil
ReplyDelete@saravana
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி