இந்த விருதுநகர் கோழி ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிதானது. இதன் சுவை ரொம்ப அலாதியானது. இதை செய்து கொடுத்தால் என் கணவர் விடுமுறை நாட்களில் வேறு எங்கும் செல்லமாட்டார் வீடே கதியென்று கிடப்பார்.
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி- 1 கிலோ
சிறிய வெங்காயம்- ¼ கிலோ
தக்காளி - ¼ கிலோ
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
சோம்பு, சீரகம் – 1 ஸ்பூன் (பொடித்தது)
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் – 25 கிராம்
மிளகுத்தூள் - ¼ ஸ்பூன்
புதினா - சிறிதளவு (தேவைப்பட்டால்)
எப்படிச் செய்வது?
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போட்டுத் தாளிக்கவும்.
- பிறகு சிறிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் வாணலியில் போட்டு சிவந்த நிறம் வரும் வரை கிளறவும்.
- பிறகு மிளகாய்த்துள், தனியாத்துள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் அனைத்தையும் அதில் போடவும்.
- இனி கோழிக் கறியை அதில் போட்டுக் கிளறவும். உப்பு தேவையான அளவிற்குச் சோத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன், ¼ ஸ்பூன் மிளகுத்தூள் சிறிது புதினா இலைகள் சேர்த்து இறக்கினால் அருமையான சிக்கன் ரோஸ்ட் ரெடி.
பெயரைக் கேட்டாலே சுவைக்கத் தூண்டுகிறது. உங்கள் கணவர் உங்களை சுற்றுவதற்கு உங்கள் கை பக்குவம் தான் காரணமோ! நன்றி!தொடரட்டும்
ReplyDeleteசமையல் பயணம்..........
Thanks for your wonderful comment.
ReplyDeletedish super madam....... paarkumpodhe sappida thonudhe
Deleteகலக்குங்க உமா வட இந்திய சமையலை, சிக்கன் ரோஸ்ட் பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு.
ReplyDelete