வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் அதை வீணாக்காமல் சுவையான இட்லியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – 1 துண்டு
மிளகு பொடி – ½ டீஸ்பூன்
சீரகப்பொடி ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கேரட் – 1
தேங்காய் துருவல் – சிறிதளவு
பச்சை பட்டாணி – ¼ கப்
மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
· சாதம் அளவுக்கு ரவை எடுத்துக் கலந்து கொள்ளவும.
· அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகு பொடி, சீரகப்பொடி, கேரட், தேங்காய் துருவல், பச்சை பட்டாணி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்தில், அழுத்திப் பிசைநது அரை மணி நேரம் ஊற வைக்கவும.
· பிறகு எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் இந்தக் கலவையை இட்லியாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
· இந்த துரித இட்லு ரொம்ப மிருதுவாக இருக்கும்
- சைடு டிஷ் இல்லாமலேயே ரொம்ப சுவையா இருக்கும்.
” துரித இட்லு” நல்லாத்தான் இருக்கு.... (பேர்தான்.....)நுவ்வு தெலுகா?
ReplyDelete@அண்ணாமலையான் அவர்களே, என்ன பெயர் வைப்பது என்ற குழப்பத்தில் துரித இட்லி என்று வைத்துவிட்டேன். நீங்களே ஓரு நல்ல பெயராக வையுங்களேன்.
ReplyDelete”சைடு டிஷ் இல்லாமலேயே ரொம்ப ’சுவையா’ இருக்கும்”
ReplyDeleteஅதனால “சுட்லி”ன்னு (சுவை+இட்லி=சுட்லி) வைக்கலாமா?
உண்மையில் சூப்பரான பதிவு இது. படம் அருமை. நாங்கள் கண்டிப்பாய் செய்து பார்க்கின்றேம்.
ReplyDeleteஅந்த இட்டிலிகளை பார்சல் அனுப்பவும். நன்றி.
வெஜிட்டபிள் ரவா இட்டிலி என்று பெயர் வைக்கலாம்
துரித இட்டிலி இல்லை தூரித இட்டிலி
ReplyDeleteநன்றி பித்தனின் வாக்கு அவர்களே, வெஜிட்டபிள் ரவா இட்டிலி பெயர் அருமை.
ReplyDelete@அண்ணாமலையான் அவர்களே, "சுவை+இட்லி=சுட்லி" பெயர் புதுமை.
சூப்பரான இட்லி ரவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளனுமா?
ReplyDeleteநல்ல ஐடியா?
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@Jaleela அவர்களே. தண்ணீர் சேர்கக அவசியமில்லை. சாததில் உள்ள ஈரப்பதமே போதுமானது. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது தயிர் சேர்க்கலாம்.
ReplyDeleteநம்ம பக்கம் வந்து உங்க ஓட்டும் கமெண்டும் போட்டா சந்தோஷமா இருக்கும்?
ReplyDeletevery interesting idli!!!!
ReplyDeletenice blog.new and intersting recipes.
ReplyDelete@jeyashrisuresh
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
akka enaku gamagamnu eppadi sambar vaikirathunu solli kodungalen......
ReplyDeletecoz.. bachelor samayal...