இடையறாத குடும்ப வேலைகளுக்கு மத்தியில் புதிய பதிவிட நேரம் கிடைக்கவில்லை. என் 18 மாத மகள் அகல்யாவிற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.
நான் வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கிறேன். இங்கு எல்லா உணவு வகைகளும் வித்தியசமானதாகவும் சுவையானதகவும் இருக்கும்.
வடஇந்திய உணவில் வெந்தயக்கீரைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. வெந்தயக்கீரையை சுவையாகவும், கசப்புத்தன்மை இல்லாமலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும் செய்யப்படும் ஆலுமேத்தி(உருளைகிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு) மற்றும் வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பாப்போம்.
ஆலுமேத்தி(உருளைக்கிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கியது)
வெந்தயக்கீரை - ½ கட்டு
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (சிறிதாக நறுக்கியது)
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 3 பல்
மஞ்சள்பொடி - ¼ தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
சீரகம்- ½ தேக்கரண்டி
உப்பு ,எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
செய்முறை:
- வானலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு தட்டிய இஞ்சிபூண்டு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீறையைச் சேர்த்துக் கிளறவும்.
- கடைசியாக தக்காளியைப் போட்டு கிளறவும்.
- பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும்.
- தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான ஆலுமேத்தி தயார். இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
வெந்தையக்கீரை சப்பாத்தி (மேத்தி ரொட்டி)
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - ½ கட்டு
கோதுமை மாவு - 2 கப்
மிளகாய்ப்பொடி - ¼ தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி) - ¼ தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் வெந்தையக்கீரையை நன்றாக அலசித் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
- கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்ப்பொடி, மாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி), 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் வெந்தையக்கீரையையைச் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
- பிறகு சிரிது சிரிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு போல பிசைந்து கொள்ளவும்.
- பிறகு சப்பாத்திகளாக இட்டு சுட்டெடுக்கவும்.
சுவையான மேத்திரொட்டி ரெடி.
Nalla recipe.. Mikka nandri en thalathiruku vandhadharku,.. :)
ReplyDeleteUngaladhu blog romba nalla iruku. Kandippa meendum varuven. :)
Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..
ReplyDeleteஆலுமேத்தியும்,வெந்தயக்கீரை சப்பாத்தியும் சூப்பர்ர்ர்...
ReplyDeleteஆலு மேத்தி ஆலு சப்பாத்தி ரொம்ப சூப்பர்,நானும் அடிக்கடி செய்வேன் உங்கள் முறிஅயிலும் செய்து பார்க்கிறென்
ReplyDelete@nithiya
ReplyDelete@vennila
@menagasathiya
@jaleela
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் வருகை புரிந்து ஊக்கமளிக்க வேண்டுகிறென்.
Dear,
ReplyDeleteI know, you're a Great cook and I adore your blog.
Just for a change...I am hosting a funny Event' in my site all about Kitchen Mishaps!
Please check it out:
http://www.kitchentantra.com/2009/12/kitchen-mishaps-event-announcement.html
Would you like to participate?
I will greatly appreciate your contribution.
Thanks
Malar Gandhi
www.kitchentantra.com
Nice and healthy chappati.
ReplyDeletehttp://padhuskitchen.blogspot.com/
The recipe looks great an thanks for visiting my blog and sure will follow you
ReplyDeletehi uma
ReplyDeleteThanks for visitng my blog dear
Allu methi and methi chapathi romba nalla irruku
Have a wonderful time with ur kid
Bye dear
ArunaManikandan