வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் அதை வீணாக்காமல் சுவையான இட்லியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – 1 துண்டு
மிளகு பொடி – ½ டீஸ்பூன்
சீரகப்பொடி ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கேரட் – 1
தேங்காய் துருவல் – சிறிதளவு
பச்சை பட்டாணி – ¼ கப்
மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
· சாதம் அளவுக்கு ரவை எடுத்துக் கலந்து கொள்ளவும.
· அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகு பொடி, சீரகப்பொடி, கேரட், தேங்காய் துருவல், பச்சை பட்டாணி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்தில், அழுத்திப் பிசைநது அரை மணி நேரம் ஊற வைக்கவும.
· பிறகு எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் இந்தக் கலவையை இட்லியாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
· இந்த துரித இட்லு ரொம்ப மிருதுவாக இருக்கும்
- சைடு டிஷ் இல்லாமலேயே ரொம்ப சுவையா இருக்கும்.