எங்கள் ஊர்ப்பக்கம் மதுரையில் இந்த உப்புக்கறி மிகப்பிரபலம். எந்த மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் ஓரு அருமையான கிராமத்து சமையல்.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி – ¼ கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
வெள்ளை உருட்டு உளுந்து – 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
செய்முறை:
- ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும் (குக்கரில் 1 விசில் + சிம்மில் 15 நிமிடம்)
- வானலியில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, சோம்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதங்கியவுடன் வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.
- இதற்கு உப்பு கொஞ்சம் தூக்கலாக போட வேண்டும்.