Thursday, December 17, 2009

கேப்பை ரொட்டி




இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு இன்றியமையாததாகும். இந்த வகையில் கேப்பை ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும். இது இதய நோய்யுள்ளவர்கள், சக்கரை நோய்யுள்ளவர்கள், உடல் குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாகும்.
   இந்தப் பதிவில் கேப்பை மாவைக் கொண்டு செய்யப்படும் ஒரு ரொட்டி வகையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கேப்பை மாவு 2 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கேரட் 1
தேங்காய் 1
கொத்தமல்லிகருவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் மற்றும் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
  • கேப்பை மாவுடன் உப்பு கலந்து நறுக்கிய மற்றும் துருவிய பொருட்களைச் கலந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பின்பு சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.
  • இது காலை உணவிற்கு உகந்ததாகும்.    
  • இதனை தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமல் அப்படியே சாப்பிடலாம். 






5 comments:

  1. ரொம்ப சூப்பர் அருமையான ராகி ரொட்டி.

    நானும் மற்ற தளங்களில் கொடுத்துள்ளேன்.ஆனால் இது போல் நாங்க அரிசி மாவில் செய்வோம்.

    ReplyDelete
  2. எளிமையா இருக்கு... அப்புறம் சுலபமா இருக்கு...ம்ம்... இன்னும் என்ன இங்கேயே மச மசன்னு போய் செஞ்சு சாப்புடுங்க...

    ReplyDelete
  3. நன்றி Jaleela, மற்றும் அண்ணாமலையான் அவர்களே.

    ReplyDelete
  4. ம்ம்ம் நினைச்சாலே நாவில் நீர் ஊருது !!! நான் நிறைய செய்வேன் இதை இதே பக்குவத்தில் சோளமாவினை கொண்டும் செய்வேன் ... ஆனால் தேங்காய்க்கு பதில் முருங்கை கீரை சேர்த்து செய்வேன்... மழைகாலத்தில் இதை சிற்றுண்டியாக தேநீருடன் சுவைத்து சாப்பிட அருமையாக இருக்கும்

    ReplyDelete
  5. azhimazhai நீங்கள் சொல்லியுள்ளபடி நான் முயற்சி செய்து பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails