Monday, December 21, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாகு





மைக்ரோவேவில் சமைப்பதால் உணவில் சத்துக்கள் விரையமாவதில்லை. வெகு சீக்கிரமாக சமைத்து விடலாம். சரி ரெசிப்பியைப் பார்க்கலாம்.
  
தேவையானவை:

கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 1 கப்
பால் 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை


செய்முறை:

·        மைக்ரோவேவ் பாத்திரத்தில் பாலைத் தவிர எல்லாவற்றையும் போட்டு, மைக்ரோ ஹையில் 6 நிமிடம் செட் செய்து, ஸ்டார்ட் செய்யவும்.
·        2½  நிமிடங்கள் ஆனபிறகு, பாஸ் பட்டனைத் தட்டி, பாத்திரத்தை வெளியே எடுத்து, பாலை ஊற்றி, ஒரு கிளறு கிளறி, மறுபடியும் உள்ளே வைத்து, மைக்ரோவேவை ஸ்டார்ட் செய்யவும்.
·        அடுத்த 3½ நிமிடம் கழித்து, மீண்டும் வெளியே எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே நெய் தடவியத் தட்டில் கொட்டிப் பரப்பவும்.
·        சிறிது ஆறியதும் துண்டு போடவும்
·        6 நிமிடத்தில் மைசூர் பாகு ரெடி.
·        இதற்கு நெய் மிகவும் குறைவாகவே செலவாகும்.


டிப்ஸ்: மைக்ரோவேவ் ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்துச் சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்படும். 

12 comments:

  1. ஆகா பதிவும், படமும் மிக அருமை. அப்படியே பார்சல் அனுப்பவும்.
    உங்கள் டிப்ஸும் அருமை. நன்றி மாதேவி.

    பெயர் எம்பியு மாதேவி கோவித்துக் கொள்ளாதீர்கள் இதில் இன்னேரு பி இணைத்தால் மப்பு மாதேவி என்று ஆகிவிடும். ஹா ஹா ஹா. சகோதரி தயவு செய்து நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளூங்கள். நன்றி.

    ReplyDelete
  2. பித்தனின் வாக்கு நன்றி.
    ஹா! ஹா! படித்துச் சிரித்தேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    மீண்டும் மீண்டும் வருக.

    ReplyDelete
  3. Mysore pak nalla irruku..
    Never tried mysorepak .

    Will give a try soon....

    ReplyDelete
  4. படத்துல இருக்கறது நீங்க செஞ்சதா?

    ReplyDelete
  5. @ அண்ணாமலையான்

    ஆமாம் சகோததரே நானே செய்த்து. புகைப்படம் என் கணவரால் எடுக்கப்பட்டது.

    ReplyDelete
  6. Hi uma,


    Love to share an award with u . Kindly accept it

    ReplyDelete
  7. அப்ப யாரு சாப்பிட்டா?

    ReplyDelete
  8. @Aruna Manikandan

    How to accept the award?

    ReplyDelete
  9. @அண்ணாமலையான்
    வேறு யார்? என் கணவர் தான் சாப்பிட்டார். )))))

    ReplyDelete
  10. // @அண்ணாமலையான்
    வேறு யார்? என் கணவர் தான் சாப்பிட்டார். ))))) //
    அய்யே உங்களுக்கு பரிசோதனை பண்ண வேறுயாரும் கிடைக்கவில்லையா! பாவம் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு நல்லா இருக்கு வேற சொல்லற கட்டாயத்துக்கு ஆளாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  11. can u give some tips to clean the microwave oven

    ReplyDelete

Related Posts with Thumbnails